close
Choose your channels

இயக்குனர் பிரியத்ர்ஷனுடன் மீண்டும் இணையும் சமுத்திரக்கனி

Saturday, June 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'மஹேஷிண்டே பிரதிகாரம்' என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளார் என்றும், இந்த படத்தில் ஃபகத்பாசில் வேடத்தில் உதயநிதி நடிக்கவுள்ளதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன் வேடத்தில் நடிக்க இயக்குனர் பிரியதர்ஷன், சமுத்திரக்கனியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த 'ஒப்பம்' படத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் பிரியதர்ஷன் படத்தில் அவர் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமுத்திரக்கனி ஏற்கனவே 'ஆகாஷ மிட்டாய்' என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதிக்கு ஜோடியாக நமீதா புரமோத் நடிக்கவுள்ள இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.