close
Choose your channels

விக்ரம்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு!

Wednesday, March 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர் என்பதும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் மற்றும் முக்கிய நடிகை நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்ரன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

7 ஸ்க்ரின் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் ஒரு ஆக்ஷன் அதிரடி ஆக்சன் படம் என்றும் விக்ரம் வில்லனாகும் துருவ் விக்ரம் நாயகனாகவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகை வாணிபோஜன் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.