close
Choose your channels

தமிழிசைக்கு நேரில் வாழ்த்து கூறிய தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடி!

Thursday, September 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கட்சி பேதமின்றி வாழ்த்துக்களை கூறினர். அதே போல் தமிழ் திரையுலகில் உள்ள பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்

இந்த நிலையில் தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடியான சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் கவர்னர் தமிழிசை செளந்திரராஜனை தெலுங்கானா மாநிலத்தின் ராஜ்பவனில் நேரில் சந்தித்து தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த தகவலை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சகோதரர் திரு.சரத்குமார் அவர்களும் திருமதி.ராதிகா சரத்குமார் அவர்களும் தெலுங்கானா ராஜ்பவனில் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.