close
Choose your channels

விஜய்-அஜித் பாணியில் களமிறங்கும் பவன்கல்யாண்

Sunday, March 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் மற்றும் தெலுங்கு படவுலகிற்கு இடையே எப்போது ஒரு பந்தம் உண்டு. கமல், ரஜினி படங்கள் தெலுங்கில் ஹிட் ஆவதும் சிரஞ்சீவி போன்ற தெலுங்கு நடிகர்கள் படம் தமிழில் ஹிட்டாவதும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது கோலிவுட்டின் பிரபல நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, விஷால் உள்பட பலரது படங்கள் தெலுங்கு மாநிலங்களில் தமிழகத்தை போலவே நல்ல ஹிட் ஆகி வருகிறது. அதேபோல் மகேஷ்பாபு, ராம் சரண், அல்லு அர்ஜுன், ஜீனியர் என்டிஆர் ஆகியோர் தங்கள் தெலுங்கு படங்களை தமிழிலும் டப் செய்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பட்டியலில் தற்போது பவர்ஸ்டார் பவன்கல்யாணும் இணைந்துள்ளார். பவன்கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள 'சர்தார் கப்பார்சிங் 2' திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் தமிழிலும் டப் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

இந்த படத்தின் நாயகி காஜல் அகர்வால் மற்றும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோர் தமிழ் ரசிகர்களுக்கும் நன்றாக அறிமுகமானவர்கள் என்பதால் இந்த படத்தை தெலுங்கில் ரிலீஸாகும் அதே நாளில் தமிழிலும் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் பாடல் வெளியீடு வரும் 20ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது. விரைவில் தமிழ்ப்பாடல் வெளியீடு சென்னையில் நடைபெறும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.