close
Choose your channels

நயன்தாராவின் டைட்டிலை வாங்கினார் விஜய்?

Tuesday, June 30, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'தலைவா' படம் உள்பட பல படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.எல்.விஜய், முதல்முறையாக தயாரிப்பாளராகி உள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படம், மலையாத்தில் சூப்பர் ஹிட் ஆகிய 'ஷட்டர்' என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்து வரும் இந்த படத்தில் அனுமோல், கல்யாணி நடராஜன், தீக்சிதா கோதாரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை பிரபல எடிட்டர் அந்தோணி இயக்குகிறார்.

இந்த படத்திற்கு 'நைட் ஷோ' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆரியுடன் நயன்தாரா நடித்துள்ள த்ரில் படத்திற்கு முதலில் 'நைட் ஷோ' என்ற டைட்டில்தான் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென படக்குழுவினர் அந்த படத்தின் டைட்டிலை 'மாயா' என மாற்றிவிட்டனர். அதன்பின்னர் தற்போது அந்த டைட்டிலை இயக்குனர் விஜய் தான் தயாரிக்கும் படத்திற்கு வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று ரிலீஸானது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாக இயக்குனர் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.