close
Choose your channels

ரஜினி, அஜித்தை அடுத்து சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த பெருமை

Wednesday, August 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகியுள்ள 'சீமராஜா' திரைப்படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் 'சீமராஜா' படத்தை போலந்து நாட்டில் வெளியிட பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதற்கு முன்னர் போலந்து நாட்டில் ரஜினிகாந்த் மற்றும் அஜித் படங்கள் மட்டுமே வெளியான நிலையில் தற்போது முதல்முறையாக சிவகார்த்திகேயன் படமும் வெளியாகவுள்ளது. 'சீமராஜா' வெளியாகும் போலந்து திரையரங்கங்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகும் என்று இந்த படத்தை போலந்தில் ரிலீஸ் செய்யும் செவந்த் சென்ஸ் சினிமாட்டிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு, மனோபாலா, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்திசுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்து வரும் இந்த படத்தில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவும், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். இந்த படத்தை 24ஏம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.