close
Choose your channels

விஜய்சேதுபதியின் 'சீதக்காதி' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Monday, November 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான '96', 'செக்க சிவந்த வானம்' , 'இமைக்கா நொடிகள்' ஆகிய படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்த அடுத்த படமான 'சீதக்காதி' திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் ஏற்கனவே விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

'சீதக்காதி' திரைப்படத்தின் டிரைலர் வரும் 21ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் இந்த செய்தி டுவிட்டர் டிரண்டில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்சேதுபதி, அர்ச்சனா, மகேந்திரன், மெளலி, பகவதி பெருமாள், ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை 'பாஷன் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.