close
Choose your channels

19 வருடங்கள் கழித்து செல்வராகவன் படத்தின் 2ஆம் பாகம்.. முதல் பாகத்தில் நடித்த அதே ஹீரோ..!

Friday, April 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஒன்றில் இரண்டாம் பாகம் 19 வருடங்கள் கழித்து உருவாக இருப்பதாகவும் முதல் பாகத்தில் நடித்த நடிகரே இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா நடிப்பில் உருவான திரைப்படம் '7ஜி ரயில்வே காலனி’. ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தற்போது தயாரிப்பாளர் ஏஎம் ரத்தினம் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படம் குறித்த ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா இரண்டாம் பாகத்திலும் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் முதல் பாகத்தில் சோனியா அகர்வால் கேரக்டர் இறந்து விடும் என்பதால் இரண்டாம் பாகத்தில் நடிக்க பிரபல நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

முதல் பாகத்தை இயக்கிய செல்வராகவன் இயக்கத்தில், முதல் பாகத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தை ஏஎம் ரத்தினம் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.