close
Choose your channels

'குக் வித் கோமாளி': இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற 4வது போட்டியாளர் இவர்தான்!

Sunday, March 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும், சீசன் 1ஐ விட சீசன் 2 பல மடங்கு ரசிகர்களை பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே

மேலும் இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள ’குக்குகளும், கோமாளிகளும் நான் ஸ்டாப் காமெடி செய்து வருகின்றனர் என்பதும் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதும் இப்போதே தெரிகிறது. குறிப்பாக அஸ்வின், புகழ், ஷிவாங்கி, பவித்ரா, கனி, உள்ளிட்டவர்கள் இன்னும் பல ஆண்டுகள் தொலைக்காட்சி மற்றும் திரையுலகில் பவனி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு ஏற்கனவே கனி, அஸ்வின் மற்றும் பாபா பாஸ்கர் ஆகிய மூவர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றும் இன்றும் வைல்டு கார்டு போட்டி நடைபெற்றது

நேற்றைய போட்டியில் அட்வான்டேஜ் பெற்ற ஷகிலா இன்று வைத்த போட்டியிலும் வெற்றி பெற்று 4ஆவது போட்டியாளராக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அவருக்கு இன்று கோமாளியாக தங்கதுரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டி தனக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்றாலும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் தனக்கு பேருதவியாக இருந்த தங்கதுரைக்கு நன்றி என்றும் ஷகிலா கூறினார். கடந்த வாரம் எலிமினேட் ஆன ஷகிலா இந்த வாரம் வைல்டு கார்டு நிகழ்ச்சியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.