close
Choose your channels

சூர்யா-கார்த்தி இணையும் படத்தின் நாயகியாகும் ஷங்கர் மகள்!

Monday, September 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா மற்றும் கார்த்தி இணையும் திரைப்படத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் நடிகையாக அறிமுகமாகிறார் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் ஒன்றை இயக்குனர் முத்தையா இயக்க இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ’விருமன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக அறிமுகமாகிறார். இதுகுறித்த போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் அதிதி ஷங்கரை தனது குடும்பத்தில் ஒருவராக வரவேற்பதாக நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். நீங்கள் ஒவ்வொருவரின் இதயத்தை வெல்வீர்கள் என்று அவர் பதிவு செய்துள்ளார். அதேபோல் இயக்குனர் ஷங்கர் தனது மகளை அறிமுகம் செய்யும் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி நிறுவனத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் கார்த்தி, முத்தையா, யுவன்சங்கர்ராஜா ஆகியோருக்கும் தனது நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.