close
Choose your channels

மாறி மாறி முத்தம் கொடுக்கும் ஸ்ருதிஹாசனும் அவரது காதலரும்.. வைரல் வீடியோ..!

Sunday, March 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனது காதலருக்கு முத்தம் கொடுக்க பதிலுக்கு காதலர் அவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் குழந்தை நட்சத்திரம் முதல் நடித்து வருகிறார் என்பதும் தமிழில் ’ஏழாம் அறிவு’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பிறகு ’3’ ’பூஜை’ ’வேதாளம்’ ’லாபம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ’வீரசிம்ஹ ரெட்டி’ மற்றும் ’வால்டர் வீரையா’ ஆகிய தெலுங்கு படங்கள் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அவர் ’சலார்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன், சாந்தனு ஹசாரிகா என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார் என்பதும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் சாந்தனுக்கு முத்தம் கொடுக்க பதிலுக்கு சாந்தனு ஸ்ருதிஹாசனுக்கு முத்தம் கொடுக்க இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.