close
Choose your channels

சிம்புவின் அடுத்த பட போஸ்டரை வெளியிட்ட சுரேஷ் காமாட்சி!

Thursday, January 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட இருப்பதாக சுரேஷ் காமாட்சி ஏற்கனவே அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வரும் பொங்கல் தினத்தை சிம்புவின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடித்து வரும் ‘மஹா’ என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றை சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவின் அட்டகாசமான போஸ்டரை பார்த்த அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இந்த போஸ்டரை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதால் இந்த போஸ்டர் தற்போது டிரெண்டுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.