close
Choose your channels

சிம்புவின் மஹா படத்தை ரிலீஸ் செய்யும் பிரபல நடிகர்!

Thursday, April 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த அடுத்த திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல நடிகர் ஒருவரின் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இதனை அடுத்து அவர் ‘கொரோனா குமார்’, ‘பத்து தல’ ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் என்பது தெரிந்ததே.

இந்நிலையில் சிம்பு, ஹன்சிகா நடிப்பில் ஜமீல் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’மஹா’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை நடிகர் ஆர்கே சுரேஷின் ஸ்டுடியோ 9 நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை நேற்று பார்த்ததாகவும் படம் இளைஞர்கள் மற்றும் குடும்ப ஆடியன்ஸ்களுக்கு ஏற்ற படம் என்றும் ஹன்சிகாவின் நடிப்பு வேற லெவல் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தை மே 27ஆம் தேதி ரிலீஸ் செய்வதாகவும் ஆர்.கே.சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து மே 27ம் தேதி சிம்பு ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் ஹன்சிகாவின் ஐம்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.