close
Choose your channels

'சாமி 2' சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Friday, July 6, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேவி ஸ்ரீபிரசாத் இசையில் 'சாமி 2' படத்தில் இடம்பெறும் பாடலான 'அதிரூபனே' என்று தொடங்கும் பாடல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த பாடல் விக்ரம் ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

விக்ரம், கீர்த்திசுரேஷ், பிரபு, பாபிசிம்ஹா, ஜான்விஜய், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார். இவர் முதல் பாகத்தில் த்ரிஷா நடித்த கேரக்டரில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை. தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரியன் வெங்கடேஷ் ஒளிப்பதிவும், விடி விஜயன் படத்தொகுப்பு பணியும் செய்து வரும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.