close
Choose your channels

இரவு நேரத்தில் திடீரென சண்டை போட்ட சிவகார்த்திகேயன் - சூரி: வைரல் வீடியோ

Monday, February 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகிய இருவரும் இரவு நேரத்தில் திடீரென சண்டை போட்டுக் கொண்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் குடும்ப ரீதியாக நெருக்கமானவர்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ’டான்’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஒருசிறிய இடைவேளைக்குப் பின் மீண்டும் நடித்தி வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடந்து வரும் நிலையில் இரவு நேரத்தில் படக்குழுவினர் அனைவரும் கிரிக்கெட் விளையாடினர்.

அப்போது சிவகார்த்திகேயன் அடித்த பந்து ஒன்று பவுண்டரியா? அல்லது சிக்ஸரா? என்ற வாக்குவாதம் நடைபெற்றது. இந்த வாக்குவாதத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஈடுபட்டனர் என்பதும் இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.