close
Choose your channels

மாஸ் வீடியோவுடன் வெளியான 'மாவீரன்' அப்டேட்.. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷி..!

Sunday, March 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றது என்பதும் குறிப்பாக இந்த படத்தின் பிசினஸ் தொடங்கிவிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

குறிப்பாக இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ மிகப்பெரிய தொகைக்கு வாங்கி உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்த விவரமும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இந்த படத்தின் தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றிருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சாந்தி டாக்கீஸ் தனது சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்த மாஸ் வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.

பக்ரீத் தினத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் கூடிய திட்டமிட்டு அதற்கு ஏற்றாவாறு படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகளை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வரும் இந்த படத்தில் மிஷ்கின், சுனில் ஆகிய இருவரும் வில்லன்களாக நடித்து வருகின்றனர். மேலும் நடிகை சரிதா ஒரு முக்கிய குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.