close
Choose your channels

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Sunday, September 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'தீனா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இன்று இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வரும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு எங்களது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
ஒரு இயக்குனர் பார்வையாளர்களுக்கு வெறும் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டும் கொடுக்காமல், நல்ல கருத்தையும், சமூக அவலத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் படம் எடுக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்பவர்களில் ஒருவர் முருகதாஸ்
எஸ்.ஜே.சூர்யா இயக்கிய 'குஷி' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய முருகதாஸ், அவருடைய பரிந்துரையின் பேரில் 'தீனா' படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். முதல்படமே சூப்பர் ஹிட் ஆனது. மேலும் இன்று அஜித்தை அனைவரும் அன்புடன் 'தல' என்று கூறுவதற்கு இந்த படமே காரணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் படம் 'தீனா'வில் இருந்து முற்றிலும் வித்தியாசமான படமாக இருந்தது அவரது இரண்டாவது படமான 'ரமணா'. கல்லூரி பேராசிரியர் ஒருவர் தன்னிடம் படித்த பழைய மாணவர்களின் உதவியுடன் சமூகத்தில் உள்ள கயவர்களை ஒழித்து கட்டும் வித்தியாசமான படம். முருகதாசுக்கு மட்டுமின்றி கேப்டன் விஜயகாந்துக்கும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற மருத்துவமனை காட்சி இன்றும் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் காட்சிகள் ஆகும்.
முதல் இரண்டு படங்களின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் அஜித்தை வைத்து 'கஜினி' என்ற படத்தை இயக்க முருகதாஸ் முயற்சி செய்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த படத்தில் அஜித்தால் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் இந்த படத்தில் சூர்யா இணைந்தார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததோடு சூர்யாவுக்கும் ஒரு பிரேக் கொடுத்தது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய அடுத்த படம் '7ஆம் அறிவு'. இந்தியாவில், தமிழகத்தை சேர்ந்த சிறந்த மூலிகை மருத்துவரான போதிதர்மர் என்றால் யார் என்றே தெரியாமல் இருந்த தமிழர்களுக்கு அவருடைய பெருமையை எடுத்து சொன்ன படம் '7ஆம் அறிவு'. சூர்யா, ஸ்ருதிஹாசனின் அற்புதமான நடிப்பில் வெளிவந்த இந்த படமும் இயக்குனருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
இதன்பின்னர் இளையதளபதி விஜய்யுடன் முதன்முதலில் முருகதாஸ் இணைந்த படம்தான் 'துப்பாக்கி'. தமிழ் திரையுலகின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று. ஸ்லீப்பர்செல் என்றால் யார், அவர்களின் பணி என்ன? என்பதை அனைவருக்கும் புரிய வைத்தது இந்த படம்தான்.
முருகதாஸ் இயக்கிய அடுத்த படம் இளையதளபதி விஜய் நடித்த 'கத்தி', பன்னாட்டு நிறுவனங்கள் அப்பாவி விவசாயிகளின் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து, அவர்களுடைய விவசாயத்தை முற்றிலும் அழித்து, அவர்களுடைய தற்கொலைக்கும் காரணமாக இருந்த அவலத்தை தோலுரித்து காட்டிய படம். இந்த படம் மிகப்பெரிய பிரச்சனைகளுக்கு பின்னர் ரிலீஸ் ஆனாலும், மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாக அமைந்தது.
இதுமட்டுமின்றி கஜினி, துப்பாக்கி, மெளனகுரு ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்த முருகதாஸ் பாலிவுட்டிலும் வெற்றி இயக்குனராக வலம் வந்தார்.
தற்போது மகேஷ்பாபு நடித்து வரும் படத்தை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் மென்மேலும் பல வெற்றிகள் கிடைக்க இந்த பிறந்த நாளில் அவருக்கு மீண்டும் எங்களது உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்க்களை தெரிவித்து கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.