close
Choose your channels

'பாகுபலி 3' குறித்து எஸ்.எஸ்.ராஜமெளலியின் முக்கிய அறிவிப்பு

Saturday, October 1, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் அக்டோபர் 23ஆம் தேதி வெளிவரும் என்றும், இந்த படம் வரும் 2017, ஏப்ரல் 28ஆம் தேதி வெளிவரும் என்றும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராஜமெளலி, 'பாகுபலி 3' உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். பாகுபலி படத்தின் மூன்றாம் பாகம் உருவாகுமா? இல்லையா? என்பது குறித்து கடந்த சில மாதங்களாக வதந்திகள் வெளியாகி வந்த நிலையில் ராஜமெளலியின் இந்த அறிவிப்பு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் 'பாகுபலி' படம் விரைவில் அனிமேஷனில் 'Baahubali - The Lost Legends' என்ற பெயரில் வெளிவரவுள்ளதாகவும், இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.