close
Choose your channels

'இறுதிச்சுற்று' இரண்டாம் பாகம் வருமா? இயக்குனர் சுதா பதில்

Friday, February 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மணிரத்னம் அவர்களின் உதவியாளரான இயக்குனர் சுதா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள 'இறுதிச்சுற்று' திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருமா? என்ற கேள்விக்கு இயக்குனர் சுதா சமீபத்தில் பதிலளித்துள்ளார்.
இந்த படத்தின் முதல் பாகத்தை எடுப்பதற்குள்ளே நான் பாதியாக குறைந்துவிட்டேன். அந்த அளவுக்கு இந்த படத்திற்காக நான் ஃபீல்ட் ஒர்க் செய்துள்ளேன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் இயக்கும் ஐடியா எனக்கு சுத்தமாக இல்லை' என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்தில் ஒருவேளை மாதவன் நடிக்காவிட்டால் யாரை தேர்வு செய்திருப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த சுதா, ' இந்த படத்தின் கேரக்டருக்கு மாதவன் மட்டுமே மிகப்பொருத்தமாக இருப்பார் என்றும், அவர் இந்த படத்தில் நடிக்க சம்மதிப்பார் என்றும் 100% நம்பினேன். ஒருவேளை அவர் மறுத்திருந்தால் என்னுடைய அடுத்த சாய்ஸ் சன்னிதியோல் அல்லது அக்சயகுமார் இவர்களில் இரண்டு பேர்களில் ஒருவராகத்தான் இருந்திருக்கும்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.