close
Choose your channels

ரஜினியின் 'தலைவர் 169': சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு?

Thursday, February 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை நெல்சன் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இன்று மாலை ஆறு மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. அனேகமாக இந்த அறிவிப்பு ரஜினியின் அடுத்த படமான ’தலைவர் 169’ படத்தின் அறிவிப்பாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படம் என்ற அறிவிப்பு வெளிவந்தால், அந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.