close
Choose your channels

'சூர்யா 42' படத்தின் டைட்டிலின் முதல் எழுத்து இதுதான்.. படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவல்..!

Wednesday, April 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம் ’சூர்யா 42’. இந்த படத்தில் சூர்யா 10க்கும் மேற்பட்ட கேரக்டர்களில் நடித்து வருவதாகவும் அதே போல் இந்த படம் தமிழ் உட்பட 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரல் 16ஆம் தேதி காலை 9.05 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ஏப்ரல் 16ஆம் தேதி ஒரு அனிமேஷன் வீடியோ மூலம் டைட்டிலை வெளியிட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் டைட்டில் பத்து மொழிகளுக்கும் பொதுவாக இருக்கும் வகையில் இருக்கும் என்றும் இந்த டைட்டில் முதல் எழுத்து ’கே’ என்று தொடங்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படத்தில் யோகி பாபு உட்பட பலர் அளித்துள்ளனர் என்பதும் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.