close
Choose your channels

சூர்யாவின் என்.ஜி.கே' தீபாவளி ரிலீஸா? அதிகாரபூர்வ தகவல்

Thursday, August 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'என்.ஜி.கே. திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கும் வரும் என்று சூர்யாவின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் உள்பட மற்ற தகவல்கள் எப்போது வரும் என சூர்யாவின் ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்தை கேள்வி மேல் கேட்டு வந்தனர்.

இந்த நிலையில் 'என்.ஜி.கே. படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. சூர்யாவின் ரசிகர்களும் செல்வராகவன் ரசிகர்களும் இந்த படத்தை மிக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பதை தாங்கள் அறிந்திருப்பதாகவும், ரசிகர்களுக்கு சரியான விருந்தாகும் வகையில் இந்த படம் அதிகபட்ச உழைப்புடன் உருவாகி வருவதாக கூறியுள்ளது.

மேலும் இந்த படம் தீபாவளிக்கு பின்னரே வெளியாகும் என்றும் சரியான ரிலீஸ் தேதி குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதன்முலம் 'என்.ஜி.கே. தீபாவளி ரிலீஸ் இல்லை என்பதும் விஜய்யின் 'சர்கார்' சோலோவாக ரிலீஸாகவுள்ளது என்பதும் உறுதியாகியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.