close
Choose your channels

'விக்ரம்' படத்திற்காக சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆச்சரிய தகவல்

Sunday, June 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகிய முதல் நாளில் உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாம் நாள் வசூல் குறித்து தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இன்றுக்குள் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் கடைசி ஐந்து நிமிடங்கள் வரும் ரோலக்ஸ் கேரக்டரில் நடிகர் சூர்யா நடித்து இருந்தார் என்றும், அவரது இந்த காட்சிகள் மாஸ் ஆக இருந்ததாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த கேரக்டரில் நடிக்க ஒரே ஒரு நாள் மட்டும் சூர்யா கால்ஷீட் கொடுத்திருந்ததாகவும், ஐந்து நிமிடங்களே வரும் இந்த காட்சியில் நடிப்பதற்காக சூர்யா எந்தவித சம்பளம் வாங்கவில்லை என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் ’விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்பதால் அந்த படத்திற்கு அவருக்கு இதுவரை வழங்கப்படாத அளவில் மிகப் பெரிய சம்பளம் வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.