close
Choose your channels

பிரிந்த மனைவியுடன் இணைந்து தியேட்டரில் படம் பார்த்த அஜித் பட நடிகர்!

Sunday, November 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரிந்த மனைவியுடன் இணைந்து அஜித் பட நடிகர் ஒருவர் தியேட்டரில் வந்து படம் பார்த்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் நடிகரும், இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரருமான பாலா, அஜித் நடித்த ‘வீரம்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு அமிர்தா சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பாலா அதன்பிறகு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2016ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டில் டாக்டர் எலிசபெத் என்பவரை நடிகர் பாலா திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திடீரென இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டது. இருப்பினும் இருவரும் விவாகரத்து செய்வது செய்தது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலையில் பாலா நடித்த மலையாள திரைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ள நிலையில் அந்த படத்தை தனது இரண்டாவது மனைவி எலிசபெத் உடன் பார்க்க தியேட்டருக்கு வந்திருந்தது வந்திருந்தார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் நடிகர் பாலா தனது மனைவியுடன் மீண்டும் இணைந்து விட்டதாக கருதிய அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.