close
Choose your channels

இந்த தமிழ் நடிகைகள் எல்லாம் பட்டதாரிகளா? ஆச்சரிய தகவல்!

Monday, July 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலக பிரபல நடிகைகள் பலரும் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆக உள்ளனர் என்ற ஆச்சரிய தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து தற்போது பார்ப்போம்.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷெட்டி ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர் என்பது பலரும் அறியாத உண்மை. அவர் கம்ப்யூட்டர் பட்டதாரி படிப்பை மவுண்ட் கார்மல் கல்லூரியில் முடித்துள்ளார்.

அதேபோல் தமிழ் திரை உலகின் நம்பர்-1 நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தெலுங்கு மலையாள திரையுலகின் நடிகைகளில் ஒருவரான சாய் பல்லவி ஒரு எம்பிபிஎஸ் டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகைகளில் ஒருவரான சமந்தா, காமர்ஸ் படைப்பில் பட்டதாரி என்பதும் இவர் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தான் பட்டப்படிப்பை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா, சைக்காலஜி, ஜர்னலிஸம் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் பட்டதாரி படிப்பை முடித்துள்ளார்.

அதேபோல் இன்னொரு பிரபல நடிகையான காஜல் அகர்வால் முதுநிலை பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மாஸ் மீடியா பட்டதாரி பட்டதாரி படிப்பை முடித்துவிட்டு அதன்பின் மார்க்கெட்டிங் படிப்பில் எம்பிஏ முடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரபல நடிகை தமன்னாவும் ஒரு பட்டதாரி என்பதும் மும்பையில் அவர் தனது பட்டப்படிப்பை முடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகை ஸ்ருதிஹாசன் சைக்காலஜி பட்டம் பெற்றவர் என்பதும் நடிகை ஸ்ரேயா சரண் டெல்லியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.