close
Choose your channels

ரஜினி-ஷங்கரின் 'எந்திரன் 2' படத்தில் அர்னால்ட்?

Tuesday, June 30, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்து விழா அரங்கையே பரபரப்பை ஏற்படுத்திய பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட், ஷங்கர் இயக்கவுள்ள "எந்திரன் 2" படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் 'எந்திரன் 2' படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் தற்போது மும்முரமாக இருக்கின்றார். ரஜினிக்கு அடுத்து இந்த படத்தில் உள்ள ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஷாருக்கான், அஜீத் ஆகியோர்களை அணுகிய ஷங்கர், அவர்கள் ஒப்புக்கொள்ளாததால் தற்போது ஹாலிவுட் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். ஏற்கனவே அறிமுகமுள்ள அர்னால்ட் அவர்களை இந்த படத்தில் நடிக்கவைக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்து தகவல்களை ஷங்கரே வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

ஷங்கருடன் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியும், அகில உலக சூப்பர் ஸ்டார் அர்னால்டும் இணைந்தால் இந்த படத்தின் பிரமாண்டம் குறித்து சொல்ல தேவையே இல்லை. அர்னால்ட் இந்த படத்தில் 25 நாட்கள் வரை நடிக்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி, அர்னால்ட், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் என பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைவதால் இதுதான் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் என கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.