close
Choose your channels

பிகில்' இசை வெளியீடு தேதி அறிவிப்பு: காத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆச்சரியம்

Thursday, September 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் ’பிகில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அதே போல் இம்மாதம் தொடங்கியதிலிருந்தே இப்படத்தின் அப்டேட்டுக்களும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் ’பிகில்’ திரைப்படத்தின் முக்கிய நிகழ்வான இசை வெளியீடு குறித்த தேதியை இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். ’பிகில்’ படத்தின் இசை வெளியீடு வரும் 19ஆம் தேதி நடைபெறும் என்று அவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்

ஒவ்வொரு ஆண்டும் தளபதி விஜய் அவர்களின் படத்தின் இசை வெளியீட்டு விழாவை காண ஆர்வமாக இருப்பேன் என்றும் குறிப்பாக அதில் தளபதியின் பேச்சை கேட்க அதிக விருப்பமாக இருப்பேன் என்று கூறியுள்ள அர்ச்சனா, இவ்வருடம் அவருடைய பேச்சை நாம் அனைவரும் வரும் 19ஆம் தேதி கேட்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவின் போது ஏஆர் ரஹ்மான் அவர்களின் உலகத்தரமான இசை நிகழ்ச்சியையும் நேரில் கண்டு ரசிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்றும் உலகின் மிகச் சிறந்த கலைஞர்களுடன் ஏஆர். ரஹ்மான் இசைக்கும் இசையை கேட்க அனைவரும் காத்திருங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் இந்த படத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.