தளபதி விஜய்யின் 'லியோ' சென்சார் சான்றிதழ்.. இதற்கு முந்தைய படங்களுக்கு என்ன சான்றிதழ் தெரியுமா?
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு U/A சான்றிதழ் அளித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் நடித்த படங்களுக்கு U/A சான்றிதழ் தான் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ’பீஸ்ட்’, ’மாஸ்டர்’, ’பிகில்’, ’சர்கார்’, ’மெர்சல்’, ஆகிய படங்களுக்கு U/A சான்றிதழ் தான் கிடைத்தது என்பதும் ’வாரிசு’ படத்திற்கு மட்டும் U சான்றிதழ் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ‘மெர்சல்’ படத்திற்கு முந்தைய படங்களான ’பைரவா’, ’தெறி’, ‘புலி’ ’கத்தி’ ’ஜில்லா’ ’துப்பாக்கி’ ’தலைவா’ ஆகிய படங்களுக்கும் U சான்றிதழ் தான் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
மொத்தத்தில் ‘லியோ’ திரைப்படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து திட்டமிட்ட நாளில் ரிலீஸ் ஆகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.