close
Choose your channels

அந்த வாத்தி ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கான்: 'மாஸ்டர்' டீசர்

Saturday, November 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது

’எனக்கு தெரியும் சார் ஜேடி இஸ் த கல்பிரிட்
வாத்திக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்துச்சு
ஃபிரியா விடு அவன் ஒரு போதை டைப்

என்று ஆரம்பத்தில் வரும் மூன்று வசனங்களில் இருந்தே ஏற்கனவே நாம யூகித்தபடி ‘மாஸ்டர்’ விஜய் கேரக்டர் ஒரு போதை பழக்கமுள்ள புரபொசர் என்பது உறுதியாகிறது. அதேபோல் ‘அந்த வாத்தி ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கான்’ என்ற ஒரு வசனத்தில் இருந்தே விஜய்சேதுபதியின் வில்லன் கேரக்டர் எந்தளவு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு நிமிடம் 30 வினாடிகள் டீசரில் விஜய் மற்றும் விஜய்சேதுபதியின் மாஸ் காட்சிகளை பார்க்கும்போதே தெறிக்க வைக்கின்றது. மாளவிகா மோகனின் ஒருசில காட்சிகள், அர்ஜூன் தாஸ், சாந்தனுவின் ஒரே காட்சி ஆகியவை அவர்களுடைய கதாபாத்திரத்தை உறுதி செய்கின்றன. ட்ரெயின் சண்டை ஆக்சன் பிரியர்களுக்கான சரியான விருந்தாக இருக்கும். விஜய், விஜய்சேதுபதி மோதும் காட்சியுடன் டீசர் முடிவடைவது படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய உயரத்தில் விட்டு சென்றுள்ளது. அதேபோல் டீஸர் முழுவதும் அனிருத்தின் இசை ராஜ்ஜியம் தெரிகிறது. மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கு முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் விருந்தை படைத்திருக்கின்றார் லோகேஷ் கனகராஜ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.