close
Choose your channels

என் உயிரில் இருந்து பிரிந்த பகுதி இங்கே.. சித்ரா குரலில் 'வாரிசு' பாடல்

Tuesday, December 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற மூன்றாவது பாடல் இன்று மாலை வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் அந்த பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் படத்தில் சின்ன குயில் சித்ரா பாடிய இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே உருக வைக்கும் அளவுக்கு உள்ளது என்றும், விவேக்கின் பாடல் வரிகள் மனதை தொடும் அளவுக்கு இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமனின் மெலடி இசையில் உருவான இந்த பாடல் தமிழ் சினிமாவில் உருவான மிகச்சிறந்த அம்மா பாடல்களில் ஒன்றாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 24ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் அன்றைய தினம் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் கேட்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னக்குயில் சித்ரா குரலில் உருவாகிய இந்த பாடலின் சில வரிகள் இதோ

ஆராரோராரிமா கேட்குதம்மா
நேரினில் வந்தது என் நெஞ்சமா

நான் கொண்ட காயங்கள் போகுதம்மா
நாடியும் மெல்லிசை ஆகுதம்மா

பிள்ளை வாசத்தில் ஆசைகள் தோரணம் சூடுதம்மா
நெஞ்சம் ஆனந்த மேகத்தில் ஊஞ்சலும் ஆடுதம்மா

என் உயிரில் இருந்து பிரிந்த பகுதி இங்கே
நான் இழந்த சிரிப்பும் இதய துடிப்பும் மீண்டும் இங்கே

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.