close
Choose your channels

'சூர்யா 42' படத்தில் இணைந்த பிரபலம்.. வேற லெவலில் ஸ்டண்ட் காட்சிகள்!

Saturday, December 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாள திரையுலகின் முன்னணி சண்டை இயக்குனர் சூர்யா நடித்து வரும் ’சூர்யா 42’ படத்தில் இணைந்து உள்ளதாகவும் இதனால் இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. நான்கு வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்துள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படத்தில் யோகி பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் தற்போது சென்னை அருகே நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக பிரபல ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மம்மூட்டி நடித்த ’கிறிஸ்டோபர்’ உள்பட பல படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்த சுப்ரீம் சுந்தர் இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்தின் சண்டைக்காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.