close
Choose your channels

சமுத்திரக்கனியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Monday, July 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனரும் குணசித்திர நடிகருமான சமுத்திரக்கனி நடித்த 'கென்னடி கிளப்', 'அடுத்த சாட்டை', 'சில்லு கருப்பட்டி' போன்ற திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது அவர் நடித்து வந்த இன்னொரு படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.

சமுத்திரக்கனி நடிப்பில் ஹலிதா ஷமீம் என்பவர் இயக்கி வந்த திரைப்படம் 'ஏலே'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது

சமுத்திரகனி, மணிகண்டன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் ஒரு காமெடி கலந்த சமூக கருத்தை தெரிவிக்கும் படம் என்பதும், இந்த படத்தின் மூலம் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் கேபர் வாசுகி இசையமைப்பில் வினோத் ராஜ்குமார் கலை இயக்கத்தில் ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.