close
Choose your channels

இந்த வார எலிமினேஷன் இவர்தான்.. இனி என்ன நடக்கும் பிக்பாஸ் வீட்டில்?

Saturday, November 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இருந்தனர் என்பதும் அவர்களில் 3 போட்டியாளர்கள் டேஞ்ஜர் ஜோனில் இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் டேஞ்ஜர் ஜோனில் இருந்த ஒரு போட்டியாளர் இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் பட்டியலில் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் அசீம், விக்ரமன், ஏடிகே, ஆயிஷா, தனலட்சுமி, ராம் மற்றும் மகேஸ்வரி ஆகிய 7 பேர் நாமினேஷன் பட்டியலில் இருந்த நிலையில் இவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகேஸ்வரி, ராம் மற்றும் தனலட்சுமி ஆகிய மூன்று பேருமே டேஞ்ஜர் ஜோனில் இருந்த நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி ராம், தனலட்சுமி விட குறைந்த வாக்குகள் பெற்றதால் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் போட்டியாளர்களில் மகேஸ்வரி மிகவும் தைரியமாக தவறை தட்டிக் கேட்கும் ஒரு நபராக இருந்த நிலையில் இனி அவருடைய வேலையை யார் செய்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.