close
Choose your channels

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது இவர்தான்

Saturday, September 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை நாம் நமது வாசகர்களுக்கு கிட்டத்தட்ட சரியாக தெரிவித்தோம். அதேபோல் ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர்கள் குறித்து நாம் முன்கூட்டியே சரியாக கூறி வருகிறோம் என்பது வாசகர்கள் அறிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை இட்டு வெளியேறும் நபர் டேனியல் என்பது தெரிய வந்துள்ளது.

ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா ஆகிய இருவரையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் இந்த வாரம் நாமினேஷன் பிராசஸ் நடத்தவில்லை. கடந்த வார டாஸ்க்கில் மோசமாக விளையாடிய ஜனனி, பாலாஜி, டேனியல் மற்றும் ரித்விகா ஆகிய நால்வரும் எவிக்சன் பட்டியலில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் ரித்விகாவை கமல்ஹாசன் காப்பாற்ற, மீதி மூன்று பேர்களும் எவிக்சன் பட்டியலில் இருந்தனர். இந்த நிலையில் இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்ற டேனியல் வெளியேறுகிறார்.

கடந்த ஏழு வாரங்களாக நாமினேஷன் பட்டியலில் இருந்து யாஷிகா, ஐஸ்வர்யாவை காப்பாற்றி வரும் பிக்பாஸ் இந்த வாரமும் யாஷிகாவை தலைவியாக்கி காப்பாற்றிவிட்டார். ஐஸ்வர்யாவை எப்படி காப்பாற்ற போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.