close
Choose your channels

திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம்: தமிழக அரசின் புதிய அரசாணை

Tuesday, December 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக திரையரங்குகளில் கிட்டத்தட்ட ஒரு டிக்கெட்டின் அளவிற்கு பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யப்பட்டது.. குறிப்பாக ஒருசில மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மணிகணக்கில் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்த நிலையும் இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய வேண்டிய தொகை குறித்து தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

*மாநகராட்சிகள், சிறப்பு நிலை நகராட்சிகள்: கார், ஆட்டோவிற்கு ரூ.20ம், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10ம் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய வேண்டும்

*நகராட்சி:  கார், ஆட்டோவிற்கு ரூ.15ம், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.7ம் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய வேண்டும்

*நகர, கிராம பஞ்சாயத்து:  கார், ஆட்டோவிற்கு ரூ.5ம், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.3ம் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய வேண்டும்

மேற்கண்ட அரசாணையின்படி திரையரங்கு உரிமையாளர்கள் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்கின்றார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.