close
Choose your channels

காஜல் அகர்வாலின் அடுத்த தமிழ்ப்படத்திற்கு 'யூ' சான்றிதழ்!

Monday, February 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் நடித்து முடித்துள்ள அடுத்த தமிழ் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் கொடுத்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

நடிகர் துல்கர் சல்மான் நாயகனாகவும் காஜல் அகர்வால் நாயகியாகவும் நடித்துள்ள திரைப்படம் ’ஹே சினாமிகா’. இந்த படத்தில் மற்றொரு நாயகியாக அதிதிராவ் ஹைத்ரி நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தை நடன இயக்குனர் பிருந்தா இயக்கி உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து மார்ச் 3ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வரும் 16ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

கோவிந்த் வசந்தா இசையில் ப்ரிதா ஜெயராமன் ஒளிப்பதிவில், ராதா ஸ்ரீதர் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் வசனத்தை மதன்கார்க்கி எழுதியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.