close
Choose your channels

அரசியல்ல நாம தலையிடனும், இல்லாட்டி அரசியல் நம்ம வாழ்க்கைல தலையிடும்: 'உறியடி 2' டீசர் விமர்சனம்

Saturday, March 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'உறியடி' படத்தில் நடித்து இயக்கிய விஜயகுமார், அதன் தொடர்ச்சியாக தற்போது 'உறியடி 2' படத்தை இயக்கி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியானது

சமூகத்தின் சமநிலை தவறும்போதெல்லாம் சகலமும் அவலமாகும். மனிதத்தன்மை கேள்விக்குறியாகும். பொறுமை காத்தால் உடமை பறிபோகும். உரிமை காக்க போராடுவதே கடமை. அரசியல்ல நாம தலையிடனும், இல்லாட்டி அரசியல் நம்ம வாழ்க்கைல தலையிடும்' என்ற வசனங்களிடையே தோன்றும் பரபரப்பான காட்சிகள் தான் 'உறியடி 2' டீசர்

அரசியல்வாதிகளின் கொட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் தேர்தல் சமயத்தில் ஒரு சரியான திரைப்படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. மோசமான அரசியல்வாதிகளுக்கு எதிராக இளைஞர்கள் பொங்கி எழுந்தால் நாட்டில் புரட்சி ஏற்படும் என்பதையே இந்த படம் விளக்குவதாக தெரிகிறது.

இந்த படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.