close
Choose your channels

'தல அஜித்தின் 'வலிமை' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Sunday, January 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில், தயாரிப்பாளர் போனி கபூரின் தயாரிப்பில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் எதுவும் வெளியேறாமல் படக்குழுவினர் ரகசியம் காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த படத்தில் அஜீத் வித்தியாசமான போலீஸ் கேரக்டரில் நடித்து வருவதாகவும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் போனிகபூர், நேற்று சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் ’வலிமை’ படம் குறித்த ஒரு சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். ’வலிமை’ திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு மாஸ் எண்டர்டெயின்மெண்ட் படம் என்றும் இருப்பினும் இந்த படத்தில் எமோஷன் காட்சிகளும் இருக்கும் என்று கூறிய அவர், இந்த படம் 2020ஆம் ஆண்டு தீபாவளி அன்று திரைக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே வரும் தீபாவளி அன்று ரஜினியின் ’தலைவர் 168’ திரைப்படம், விஜய்யின் ’தளபதி 65’ திரைப்படம் ஆகியவை வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அஜித்தின் ’வலிமை’ திரைப்படம் தீபாவளி வெளியீடு என்று கிட்டத்தட்ட அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ரஜினி, விஜய், அஜித் ஆகிய மூன்று மாஸ் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகுமா? என்பதை தீபாவளி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.