close
Choose your channels

'வெந்து தணிந்தது காடு' படத்தின் செம அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்!

Saturday, July 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, டீஸர், டிரைலர் ஆகியவை அடுத்தடுத்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட்மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை அந்நிறுவனத்திடமிருந்து தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்று இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சமீபகாலமாக ரஜினிகாந்த். கமல்ஹாசன். விஜய். சூரியா உள்பட பல பிரபலங்களின் படங்களை ரிலீஸ் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது சிம்புவின் படத்தையும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.