close
Choose your channels

விஜய் ஆண்டனியின் 'எமன்' இசை-படம் ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு

Friday, January 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்', 'சைத்தான்' படங்களின் வெற்றியை அடுத்து தற்போது அவர் 'எமன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இரண்டு சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளிவரவுள்ள 'எமன்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு தேதிகளை இயக்குனர் ஜீவா சங்கர் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீடு வரும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதியும், வரும் மகாசிவராத்திரி தினத்தில் இந்த படம் திரைக்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ், தியாகராஜன், சங்கிலிமுருகன், ஜி.மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இயக்குனர் ஜீவா சங்கர் ஒளிப்பதிவும், வீர செந்தில் ராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.