close
Choose your channels

மீண்டும் இணைகிறது சூப்பர் ஹிட் வெற்றி கூட்டணி

Friday, January 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் ஒருசில இயக்குனர்கள்-இசையமைப்பாளர்கள் கூட்டணி இயல்பாகவே மிக அபாரமாக அமைந்துவிடும். பாரதிராஜா-இளையராஜா, மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான், கவுதம்மேனன் - ஹாரீஸ் ஜெயராஜ், பிரபுசாலமன் - இமான், செல்வராகவன் - யுவன்ஷங்கர் ராஜா போன்ற கூட்டணிகளை உதாரணமாக கூறலாம். அந்த வகையில் லிங்குசாமி-யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி இதற்கு முன்னர் 'பையா' மற்றும் 'சண்டக்கோழி' என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த வெற்றி கூட்டணி மீண்டும் தற்போது 'சண்டக்கோழி 2' படத்தில் இணைந்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் பாடல்கள் கம்போசிங் இன்று முதல் பெங்களூரில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டணி மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் ஆல்பத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஷால், கீர்த்திசுரேஷ், மீரா ஜாஸ்மின் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.