close
Choose your channels

மறு தணிக்கை செய்யப்பட்டது விஜய்யின் 'சர்கார்'

Friday, November 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறு தணிக்கை செய்யப்பட்டது விஜய்யின் சர்கார்

நடிகர் விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தில் 'கோமளவல்லி' என்ற கேரக்டர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிடுவதாகவும், தமிழக அரசு கொடுக்கும் இலவச பொருட்களை அவமதிக்கும் வகையில் உள்ள காட்சி இந்த படத்தில் இருப்பதாகவும், இந்த இரண்டு காட்சிகளையும் படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அதிமுகனர் போராட்டம் நடத்தினர்

இதனையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு ஒப்புக்கொண்டதை அடுத்து நேற்றிரவே மறுதணிக்கைக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் சர்கார் படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டு மறு தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது. இந்த மறு தணிக்கை செய்யப்பட்ட 'சர்கார்' திரைப்படம் இன்று மாலை முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என கூறப்படுகிறது. மறுதணிக்கைக்கு பின் திரையிடப்படும் 'சர்கார்' படத்தில் கோமளவல்லி என்பது மியூட் செய்யப்பட்டும், தமிழக அரசு கொடுக்கும் இலவச பொருட்களை தீயில் போடும் காட்சி நீக்கப்பட்டும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.