close
Choose your channels

3 கண்டங்கள், 4 நகரங்கள்: நீண்ட சுற்றுப்பயணம் கிளம்பிய விஜய் பட நாயகி!

Saturday, July 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் படத்தில் நாயகியாக நடித்த நடிகை மூன்று கண்டங்கள் மற்றும் நான்கு நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’பீஸ்ட்’. இந்த படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

இந்த நிலையில் பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மாத நீண்ட சுற்றுலா செல்ல இருப்பதாகவும், மூன்று கண்டங்கள் மற்றும் நான்கு நகரங்களுக்கு பயணம் செய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் முதல் கட்டமாக மும்பையில் இருந்து பாங்காங் சென்ற புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரல் ஆகி வருவது. இன்னும் என்னென்ன கண்டங்களுக்கு எந்தெந்த நகரங்களுக்கு அவர் செல்வார் என்ற அப்டேட் அவரது இன்ஸ்டாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் பூஜா ஹெக்டே தனது தாயாரின் 60வது நாளை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் மாலத்தீவு சென்றிருந்தார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.