close
Choose your channels

காதலியை கைப்பிடிக்கும் விஜய் டிவி புகழ்: திருமண தேதி அறிவிப்பு!

Sunday, August 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி உள்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் புகழ் என்பதும் தற்போது அவர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் விஜய் டிவி புகழ் கடந்த சில ஆண்டுகளாக கோவையை சேர்ந்த பென்சியா என்ற பெண்ணை காதலித்து வந்ததாகவும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் தெரிவித்திருந்தார். அது மட்டுமின்றி தனது காதலியின் புகைப்படங்களையும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வந்தார் என்பது தெரிந்ததே.

மேலும் சமீபத்தில் திருமணத்திற்கு முந்தைய ப்ரீவெடிங் போட்டோஷூட் புகைப்படங்களும் எடுக்கப்பட்டது என்பதும் அந்த புகைப்படங்களை இணையதளத்தில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் டிவி புகழ் தனது காதலி பென்சியாவை வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களது திருமண பத்திரிகையையும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவி புகழ் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தாலும் ’மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.