close
Choose your channels

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் விஜயசாந்தி!

Saturday, June 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை விஜயசாந்தி, கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கானா மாநில அரசியலில் தீவிரம் காட்டி வந்தார். சந்திரசேகராவ் அவர்களின் தெலுங்கானா ராஷ்டிரிய சமதி கட்சியில் இணைந்த விஜயசாந்தி, அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். ஆனால் திடீரென தெலுங்கானா மாநில தேர்தலுக்கு ஒருசில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததால் அவரது அரசியல் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் அடுத்த படமான 'Sarileru Neekevvaru' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அவருடைய கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மகேஷ்பாபு, ராஷ்மிகா மந்தனா, ஜெகபதிபாபு, விஜயசாந்தி, உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை அனில் ரவிபுடி இயக்கி வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை தில்ராஜூ தயாரித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.