close
Choose your channels

செல்பி எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

Friday, April 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக மக்களும், மற்றும் தேமுதிகவினர் அனைவரும், அவரவர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்து மொபைல் போனில் செல்பி படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு முககவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்தவேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ்‌ உலகையே அச்சுறுத்திக்‌ கொண்டிருக்கும்‌ இந்த நேரத்தில்‌ தமிழகத்தில்‌ கொரோனா வைரஸ்க்கு எதிராக ஊரடங்கு அமலுக்கு வந்து ஒரு மாதம்‌ முடிந்து மே 3ம்‌ தேதி வரைக்கும்‌ நீட்டிக்கப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில்‌ மக்களிடையே மேலும்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ ஒட்டுமொத்த தமிழக மக்களும்‌, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த கழக நிர்வாகிகள்‌ முதல்‌ தொண்டர்கள்‌ வரை அனைவருமே, அவரவர்கள்‌ முகத்தில்‌ முககவசம்‌ அணிந்து மொபைல்‌ போனில்‌ செல்‌ஃபி படம்‌ எடுத்து டிபியாக அதை சமூக வலைதளங்களில்‌ பதிவிட்டு முககவசத்தின்‌ அவசியத்தை வலியுறுத்தும்‌ வண்ணம்‌ விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாம்‌ அனைவரும்‌ ஒன்றிணைந்து ஏற்படுத்த வேண்டும்‌ என தமிழக மக்களையும்‌, தேமுதிக தொண்டர்களையும்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.

மேலும்‌ இந்த விழிப்புணர்வு புகைப்படத்தை மே 5ம்‌ தேதி வரை அவரவர்கள்‌ மொபைலில்‌ டிபியாக வைத்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்‌. ஒன்றிணைவோம்‌। வென்றிடுவோம்‌! என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முகக்கவசம் அணிந்த தன்னுடைய புகைப்படத்தையும் விஜயகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos