close
Choose your channels

தயாரிப்பாளர், இயக்குனர்களுக்கு இரண்டு கண்டிஷன் போடும் லேடி சூப்பர் ஸ்டார்!

Saturday, January 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்தியத் திரையுலகின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் விஜய் சாந்தி கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் தீவிரம் காட்டி உள்ளதால் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் ஓரிரு படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். குறிப்பாக வரும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாக உள்ள மகேஷ்பாபு நடித்த தெலுங்கு படம் ஒன்றில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் வெளியானதும் அவருக்கு இன்னும் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒருசில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தில் நடிக்க விஜய்சாந்தியை அணுகியபோது அவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் இரண்டு முக்கிய கண்டிஷன்கள் போட்டதாக தெரிகிறது. ஒன்று தான் நடிக்கும் படத்திற்கு மிகப் பெரிய தொகை ஒன்றை சம்பளமாக அவர் கேட்டதாக கூறப்படுகிறது. இரண்டாவதாக அம்மா, அக்கா, அண்ணி போன்ற வேடங்களிலும், சிறப்பு தோற்றங்களில் நடிக்க முடியாது என்றும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் மட்டுமே நடிப்பேன் என்றும் விஜய் சாந்தி கூறியுள்ளாராம்.

இந்த இரண்டு கண்டிஷன்களுக்கு ஒத்துப்போகும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் படங்களில் மட்டுமே நடிப்பது என விஜயசாந்தி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவருடைய கண்டிஷன்களுக்கு ஒப்புக்கொண்டு அவரை ஒப்பந்தம் செய்யும் இயக்குனர் யாராக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.