பொங்கல் ரேஸில் இணைந்த மேலும் ஒரு திரைப்படம்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
2018ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம் ரிலீஸ் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் இதே தினத்தில் விஷாலின் 'இரும்புத்திரை மற்றும் ஆர்.கே.சுரேஷின் 'பில்லா பாண்டி' ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விமல் நடித்த 'மன்னார் வகையறா' என்ற திரைப்படமும் பொங்கல் ரிலீஸ் பட்டியலில் தற்போது இணைந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்புடன் கூடிய போஸ்டர் ஒன்று தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
விமல், ஆனந்தி, சாந்தினி, பிரபு, சரண்யா, நாசர், ஜெயபிரகாஷ், ரோபோசங்கர், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பூபதிபாண்டியன் இயக்கியுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.