close
Choose your channels

விஜய்சேதுபதி-த்ரிஷாவுடன் மோதும் விஷ்ணுவிஷால்

Saturday, September 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவராகிய விஷ்ணுவிஷால் நடிப்பில் இந்த ஆண்டு இன்னும் ஒரு படம் கூட வெளிவராத நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள 'ராட்சசன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

'ராட்சசன்' திரைப்படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தேதியில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 'ராட்சசன்' திரைப்படத்தின் இசை வெளியீடு வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவிஷால், அமலாபால், சுஜானே, சஞ்சய், காளிவெங்கட் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை ராம்குமார் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையில் பிவி சங்கர் ஒளிப்பதிவில், சங்கோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.