close
Choose your channels

அஜித் ஒரு மனிதக்கடவுள்: 'விஸ்வாசம்' நடிகர் பெருமிதம்

Monday, November 5, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் என்றாலே அவர் ஒரு நடிகர் என்பதைவிட மனித நேயம் கொண்டவர், மற்றவர்களை மதிக்கும் பழக்கம் உடையவர், யாருக்கும் தெரியாமல் பல்வேறு உதவி செய்தவர் என்பதுதான் அனைவருக்கும் ஞாபகம் வ்ரும். இதனாலேயே அவருடன் நடிக்க கோலிவுட் திரையுலகினர் அனைவரும் விரும்புவதுண்டு.

இந்த நிலையில் தற்போது அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ள வெள்ளைப்பாண்டி தேவர் என்பவர் அஜித் குறித்து கூறியதாவது:

தல அஜித் குறித்து கூறவேண்டும் என்றால் அவர் கடவுள், கடவுளுக்கும் மேல். சுருக்கமான கூறினால் அவர் ஒரு மனிதக்கடவுள். மக்களை நேசிப்பவர். ஏழை எளிய மக்களிடம் அன்பு காட்டக்கூடியவர். மக்களிடம் அவ்வளவு பாசம் காட்டக்கூடியவர்' என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் சிவா இயக்கி வரும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், இந்த படத்தை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் தீவிரமாக இரவுபகல் பாராது பணிபுரிந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.